×

கோமியத்தை விமர்சித்ததால் தேச துரோக வழக்கு: அரசியல் ஆர்வலரை விடுவிக்க உத்தரவு: உச்ச நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி:  மணிப்பூரை சேர்ந்தவர் அரசியல் ஆர்வலர் லீசோம்பாம் எரன்டோ(37). பசுவின் சாணம், மற்றும் கோமியம் கொரோனா பாதிப்பை குணப்படுத்தாது என எரன்டோ தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக பாஜ துணை தலைவர் உஷாம் தேபன், பொது செயலாளர் பிரேமானந்தா மீடாய் ஆகியோர் மணிப்பூர் போலீசில் புகார் கொடுத்தனர். புகாரின்பேரில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் எரன்டோ கடந்த மே 13ம் தேதி கைது செய்யப்பட்டார். உள்ளூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியும் அவர் விடுவிக்கப்படவில்லை. இதனை தொடர்ந்து அவரது தந்தை ரகுமணி சிங், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இந்த வழக்கு நேற்று உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான இரண்டு நீதிபதிகள் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரை தொடர்ந்து தடுத்து வைத்திருப்பது, 21வது சட்டப்பிரிவின்படி, அவர் வாழ்வதற்கான உரிமை மற்றும் அவரது தனிப்பட்ட சுதந்திரத்தை மீறுவதாக இருக்கும் என கருதுகிறோம். 1000 சொந்த பிணையில் இன்று(நேற்று) மாலை 5மணிக்குள் சிறையில் இருந்து மனுதாரரை விடுவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். …

The post கோமியத்தை விமர்சித்ததால் தேச துரோக வழக்கு: அரசியல் ஆர்வலரை விடுவிக்க உத்தரவு: உச்ச நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,New Delhi ,Leesombam Eranto ,Manipur ,Gomiyam ,Dinakaran ,
× RELATED வாக்காளர் ரகசியம் மீறப்படுவதாக...